×

காரிமங்கலம், பாலக்கோட்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

தர்மபுரி, பிப்.28: காரிமங்கலம், பாலக்கோட்டில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை உடனே போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை செய்த தின பணியாளர்கள், கடந்த 4 மாதங்களாக தின சம்பளம் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். எனவே தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உடனே தின சம்பளம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு வட்டத்தில் கடும் பற்றாக்குறையை உடனே போக்க வேண்டும். கடந்த 3 வருடங்களாக, தர்மபுரி மாவட்டத்தில் வறட்சின் காரணமாக தென்னை உள்ளிட்ட பல் வகை மரங்கள் முழுமையாக காய்ந்துவிட்டன. இதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன், சங்க மாவட்ட துணை தலைவர்கள் ராஜகோபால், முருகேசன், துணை செயலாலர் பச்சாகவுண்டர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாதையன், சாரதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Balakot ,Karaimangalam ,
× RELATED போர் விமானி அபிநந்தன் கதையில் பிரசன்னா